தன்னை பதவியை விட்டு நீக்க, அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டு அதிபரை டிரம்ப் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அவரை பதவியை விட்டு நீக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி விசாரணையை தொடங்கியுள்ளது. ஜனநாயக கட்சியின் இந்த விசாரணை வேடிக்கையாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தன்னை யாராலும் மிரட்ட முடியாது என உக்ரையன் அதிபர் விளாடிமிர் ஜலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தனது மகன் மட்டுமே தன்னை மிரட்ட முடியும் எனக் கூறிய அவர், டிரம்ப் மிரட்டியதாக வரும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
Discussion about this post