தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், நாமக்கல், திருவண்ணாமலை உள்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post