கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில், கம்பு விளைச்சல் அதிகளவில் உள்ளதால், நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள பாளையங்கோட்டை பகுதியில், கம்பு விளைச்சல் அமோகமாக இருந்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக, கம்பு பயிர்கள் 150 சென்டி மீட்டர் முதல் 180 சென்டி மீட்டர் வரை வளர்ந்துள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் ஆலோசனைகள், கருத்தரங்க கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகளில் விவசாயிகள் கலந்து கொண்டதால், பெரும் உதவியாக இருப்பதாகவும், இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் விலை அதிகமாக கிடைப்பதால் விவசாயிகள் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post