சிறுவனை கடத்தி, போலி ஆவணங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேந்த ராஜன்செல்வின் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது சகோதரியின் குடும்பத்தினர் அனைவரும் மரணமடைந்த நிலையில், 2-வது மகனான அஸ்வினை தன் பாதுகாப்பில் படிக்க வைத்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக விஜய், மகாலெட்சுமி, லட்சுமணன் ஆகியோர், அஸ்வினை கடத்தி வைத்து, சொத்துக்காக போலி சான்றிதழ் தயாரித்து, வாரிசு உரிமை கொண்டாடுவதாகவும் கூறியிருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அஸ்வின் சிறுவனாக இருப்பதால், லட்சுமணன் உள்ளிட்டோர் போலி பத்திரம் தயாரித்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்து, அஸ்வின் சொத்துக்களில் சட்டவிரோதமாக உள்ளவர்களை வெளியேற்றவும் உத்தரவிட்டது.
Discussion about this post