சமீபத்தில் காஷ்மீர் மாநிலம், ஜம்மு மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதுகுறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா.வில் கேள்வி எழுப்பப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்தார். நேற்று நடைபெற்ற ஐ.நா பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் காஷ்மீர் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
உலக நாடுகளின் ஆதரவு பாகிஸ்தானுக்கு கிடைக்காததால், அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானிற்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டுள்ளது.
Discussion about this post