இந்திய அணியின் தற்போதைய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா. போட்டிகளில் எதிர் அணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார். சமீபத்தில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் உள்பட 13 விக்கெட்கள் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில், இந்தியா-தென்னாப்பிரிக்களுக்கு இடையேயான இருபது தொடர் சமனின் முடிந்தது. இதைத்தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இத்தகவலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
உமேஷ் யாதவ், கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்திய டெஸ்ட் அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து பும்ரா காயம் காரணமாக விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post