கணினி மற்றும் கைபேசி தயாரிப்பில் பிரபலமாக உள்ள நிறுவனம் லெனோவா. இளைஞர்களின் தேவைகளைக் குறிவைத்து இவர்கள் சமீபத்தில் தயாரித்துள்ள ஸ்மார்ட் கைபேசிதான் ‘கே 10 பிளஸ்’.
இந்த ’கே 10 பிளஸ்’ கைபேசியில் பின்புறம் ஒரு 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா உள்ளது. இதனுடன் டூயல் எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டு உள்ளது. அத்தோடு ஒரு 5 மெகா பிக்சல் போர்ட்ரைட் கேமராவும், இன்னொரு 8 மெகா பிக்சல் 120 டிகிரி வைடு ஆங்கிள் லென்ஸ் கேமராவும் உள்ளன. அத்தோடு 16 மெகா பிக்ஸல் திறனுடைய செல்ஃபி கேமரா ஒன்று முன்புறம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் விதவிதமான புகைப்படங்களை விரும்பும் இளைஞர்களை இந்தக் கைபேசி ஈர்க்கும் என்று
எதிர்பார்க்கப்படுகின்றது.
6.22 இன்ச் டிஸ்பிளே உள்ள இந்தக் கைபேசியில் 4 ஜிபி ராமும், 64 ஜிபி நினைவகமும் உள்ளன. தேவைப்பட்டால் இதன் நினைவகத்தை மேலும் நீட்டிக்கவும் முடியும். தகவல் பாதுகாப்புக்கு கைரேகையைப் பயன்படுத்தும் சென்சார் வசதியும் இதில் உண்டு.
4050 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ள இந்தக் கைபேசியானது, ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் இயங்கும். இதில் இரண்டு சிம்களைப் பயன்படுத்த முடியும். ஸ்பிரைட் மற்றும் கருப்பு என்ற இரண்டு நிறங்கள் இதில் உண்டு.
இந்தக் கைபேசி, வரும் 30 ஆம் தேதி துவங்கும் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது இந்தியாவில் சந்தைக்கு வர உள்ளது. இதன்விலை சுமார் 11 ஆயிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post