ஸ்ட்ரீட் லீக் உலக சாம்பியன் ஷிப் பெண்கள் பிரிவில் பிரேசிலை சேர்ந்த ஸ்கேட் போர்ட் வீராங்கனைகள் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
பிரேசிலில் நடைபெற்ற ஸ்ட்ரீட் லீக் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்கேட் போர்டு வீராங்கனைகளான பமீலா ரோசா மற்றும் 11 வயது சிறுமி ரெய்சா லீல் ஆகியோர் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர். இருவரும் கிடத்தட்ட ஒரே புள்ளிகளை பெற்றுள்ளதால் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கள் வெற்றியை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்கள் பிரிவில் அமெரிக்காவின் நைஜா ஹஸ்டன் தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். ஜப்பானின் யூட்டோ ஹொரிகோம் இரண்டாவது இடத்தையும், போர்ச்சுகலின் குஸ்டாவோ ரிபேரோ மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
Discussion about this post