நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அவலாஞ்சி அணை தனது முழு கொள்ளளவான 171 அடியை எட்டியது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நேற்று இரவு முதல் இரண்டாவது முறையாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. இங்கு வெளியேற்றப்படும் நீர் நேரடியாக குந்தா அணைக்கு செல்வதால், குந்தா அணியிலிருந்தும் வினாடிக்கு 500 முதல் 600 கன அடி வரை நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையொட்டி கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.
Discussion about this post