நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவுவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா, கடந்த 2018-ஆம் ஆண்டு மும்பையில் நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், மாணவனின் ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படமும், தற்போதுள்ள முகமும் மாறுபட்டு இருந்ததால் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை தலைமறைவாக உள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post