2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மொபைல் செயலி வழியாக நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பட உள்ளதாக கூறினார். காகித கணக்கெடுப்பில் இருந்து டிஜிட்டல் கணக்கெடுப்புக்கு மாறும் முறையாக இது அமையும் என்று கூறிய அமித்ஷா, அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே விதமான அடையாள ஆவணமோ அல்லது அட்டையோ தேவை என்று கூறினார். கணக்கெடுப்பு துவங்கிய 140 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக மொபைல் செயலி மூலமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாகவும், வீடுவீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் தங்கள் சொந்த செல்போன் வாயிலாக கணக்கெடுப்பை நடத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
Discussion about this post