வார முதல்நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த வார இறுதியில் இந்திய பங்குச்சந்தைகள் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்ந்தன. உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு சலுகை அளித்ததை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று வர்த்தக நேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் உயர்வுடன் தொடங்கின. இதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. FMCG, உள்கட்டமைப்பு, வாகனம், வங்கி உள்ளிட்ட அனைத்து பங்குகளின் மதிப்பு உயர்வை சந்தித்துள்ளன. இருப்பினும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்தது. காலை நிலவரபப்டி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு10 காசுகள் குறைந்து 71 ரூபாய் 4 காசுகளாக உள்ளது.
Discussion about this post