கடலூர் மாவட்டம் நெய்வேலியில் புனரமைக்கப்பட்ட விமான நிலையத்தில் மீண்டும் விமான போக்குவரத்து பணிகள் துவங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி வெளியிடப்பட்ட தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையின் அடிப்படையில், பயன்பாட்டில் இல்லாத விமான நிலையங்களை புனரமைத்து மீண்டும் சேவை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சரின் முயற்சியால் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே உருவாக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நெய்வேலியில் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான தளம் புனரமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த விமான நிலையத்தின் பாதுகாப்பு பணிகளில் கூடுதல் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களை பணி அமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நெய்வேலியில் புனரமைக்கப்பட்ட விமான நிலையத்தில், மீண்டும் விமான போக்குவரத்து பணிகள் துவங்கியுள்ளதால் கடலூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post