பிரான்ஸ் நாட்டில் மீண்டும் வலுத்துள்ள மஞ்சள் சட்டைப் போராட்டம், அந்நாட்டு அரசுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
எரிபொருள் விலையைக் குறைக்கக் கோரி பிரான்சில் மஞ்சள் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக ஓய்ந்திருந்த இந்தப் போராட்டம் தற்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது. தலைநகர் பாரீசில் நடந்த போராட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தித் தீயிட்டு எரித்தனர். இந்தப் போராட்டம் தொடர்பாக 153 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் 300 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பாரீஸ் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post