அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடி 16 எண்ணெய் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஆண்டுக்கு 50 லட்சம் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் வகையில் அமெரிக்காவின் டெல் லூரியன், இந்தியாவின் பெட்ரோ நெட் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பமானது. இதற்கான முறையான உடன்பாடு, இரு நிறுவனங்களின் இயக்குநர்களின் ஒப்புதலைப் பெற்று அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி கையொப்பமாகும்.
Discussion about this post