இந்திய பொருளாதாரத்தில் கைத்தறி முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில், அனைத்து தேவாங்கர் சமூக நல மாநாட்டில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நெசவு தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும் என்றார். நெசவாளர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வையும், 10 சதவீத கூலி உயர்வையும் தமிழக அரசு பெற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மாநாட்டில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நெசவாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்கு கைத்தறித்துறை அமைச்சர் கொண்டு செல்வார் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
Discussion about this post