இந்தியா முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் அதிகரித்து வரும் நீதிபதிகள் காலிபணியிடங்களால், 39 லட்சத்து 52 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நாட்டில் மொத்தமுள்ள உயர்நீதிமன்றங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை ஆயிரத்து 79 ஆக உள்ளது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 427 பேர் பணி ஓய்வு பெற்றனர். அதன்படி, பணியில் உள்ள நீதிபதிகள் எண்ணிக்கை 652 ஆக குறைந்தது. இதனால், ஏராளமான வழக்குகள் தேங்கும் நிலை ஏற்பட்டது. எனவே, காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சட்ட அமைச்சகத்துக்கு, மத்திய அரசு ஏற்கனவே பரிந்துரை செய்தது. இந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், 2018 மே மாதம் வரை கூடுதலாக 313 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
இது மட்டுமின்றி கடந்த 7 ஆண்டுகளில் அதிகபட்சமாக, ஆண்டுக்கு 104 நீதிபதிகள் நியமிக்கப்படனர். இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் ஓய்வுபெறும் நீதிபதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது குறைவான எண்ணிக்கையாகவே கருதப்படுகிறது. தற்போதைய நிலையில், காலியாக உள்ள நீதிபதிகளுக்கான பணியிடங்கள் 427 ஆக உள்ளது. அதிகரித்து வரும் நீதிபதிகள் காலிபணியிடங்களால், 39 லட்சத்து 52 ஆயிரம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. இவற்றில் 22 சதவீதம் வழக்குகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post