காட்டு யானைகளை வேட்டையாடி தந்தங்களை விற்று வந்த நபரை, 4 வருடங்களுக்கு பிறகு வனத்துறையினர் மேட்டுப்பாளையத்தில் கைது செய்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைக்காடு பகுதிகளில், மர்ம கும்பல் ஒன்று காட்டு யானைகளை வேட்டையாடி அதன் தந்தங்களை விற்று வந்தது. மேட்டுப்பாளையம், சிறுமுகை, கூடலூர் வனப்பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த கடத்தல் கும்பலை, கடந்த 2016ஆம் ஆண்டு வனத்துறையினர் கைது செய்தனர். கடத்தல் கும்பலிடம் நடத்திய தீவிர விசாரணையில், முக்கிய குற்றவாளியான பாபு என்பவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வழக்கு ஒன்றிக்காக மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான பாபுவை, 4 வருடங்களுக்கு பிறகு வனத்துறையினர் கைது செய்தனர். பாபுவிடம் நடத்திய விசாரணையில், யானைகளை வேட்டையாடி தந்தங்களை டெல்லியில் விற்று வந்தது தெரியவந்தது. இதனையடுத்து பாபு மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Discussion about this post