சென்னை ஐடி நிறுவன ஊழியர்களின் அறைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிகாஷ் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது அறையில் இருந்து லேப்டாப், செல்போன்கள் கடந்த மாதம் திருடி செல்லப்பட்டது. இதனை மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் வந்து திருடி சென்றது அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில், சத்யராஜ், கார்த்தி, ராம்குமார், சக்திவேல் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 லேப்டாப்கள் மற்றும் 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Discussion about this post