வெட் கிரைண்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை தடுக்க, மத்திய அரசு மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரிகள் குறைக்கப்பட்டு, ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. கோவாவில் நடைபெற்ற 37-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடல்சார் எரிபொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உலர்ந்த புளி மீதான ஜிஎஸ்டி வரி முற்றிலும் ரத்து செய்யப்படுவதாகவும், ஹோட்டல்களில் தின வாடகை ரூ.1000க்கு குறைவாக இருந்தால் ஜிஎஸ்டி கிடையாது என்றும் கூறினார். திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Discussion about this post