வரிச்சலுகை அறிவிப்பால் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியனை நோக்கி செல்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றும், இது மேக் இன் இந்தியாவுக்கு ஒரு சிறந்த தூண்டுதலைக் கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதிலுமிருந்தும் தனியார் முதலீட்டை ஈர்க்கும் என்றும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ள மோடி, இது 130 கோடி இந்தியர்களுக்கு வெற்றியை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
Discussion about this post