உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று, ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள வினேஷ் போகத்
வினேஷ் பொகத் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்தியாவின் முதல் பெண் நட்சத்திர மல்யுத்த வீராங்கனை. மேலும், நாம் பலரும் அறிந்த ஹிந்தி திரைப்படமான தங்கல் திரைப்படத்தின் உண்மை கதாநாயகியும் இவர்தான்.
சில நாட்களுக்கு முன்பு மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் பத்மஸ்ரீ விருதுக்காக வினேஷ் பொகத் பரிந்துரைக்கப்பட்டார். காரணம் 2020 டோக்யோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதியடைந்து உள்ளதுதான். கஜகஷ்தானின் நூர்சுல்தான் பகுதியில் நடைபெற்று வந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் 8-2 என்ற கணக்கில் இறுதி போட்டியில் அமெரிக்காவின் சாராவை வீழ்த்தி,வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதியடைந்துள்ளார். அடுத்தகட்டமாக 53 கிலோ எடைப் பிரிவில் கிரேக்க நாட்டின் மரியாவுடன் போட்டியிட உள்ளார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் சீமா பிஸ்லா, சரிதா மோர் மற்றும் கிரண் பிஷ்னோய் ஆகிய பிற இந்திய வீரர்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்புகளை தவிற விட்ட நிலையில், வெண்கலப் பதக்கம் வெல்ல தற்போது வினேஷ் போகத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கஜகஸ்தானின் நூர் சுல்தான் நகரின் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் 53கி எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் பொகத் கலந்து கொண்டு முதல் சுற்றிலேயே ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஸ்வீடன் வீராங்கனை Sofia Mattsson-ஐ 13-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.
அதை தொடர்ந்து நடந்த ரெபிசேஜ் சுற்றின் முதல் போட்டியில் 5-0 என்ற கணக்கில் உக்ரைனின் வீராங்கனை யூலியாவை எதிர்கொண்ட வினேஷ், தனது சிறப்பான ஆட்டம் மூலமாக வென்றார்.
இரண்டாவது ரெபசாஜ் சுற்றில் 53 கி எடை பிரிவில் முதல் நிலை அமெரிக்க வீராங்கனையான Sarah Ann Hildebrandt ஐ வினேஷ் போகத் எதிர்கொண்டார். இதில் அபாரமாக செயல்பட்ட போகத் 8-2 என்ற கணக்கில் அவரை வீழ்த்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இவ்வாறு சிறந்து விளங்கும் போகத்தின் ஒன்றுவிட்ட சாகோதரிகள் கீத போகத், பபிதா குமாரியும் கூட மல்யூத்த வீரர்கள் ஆவர்கள். ஆண்களுக்கு பெண்கள் சலைத்தவர்கள் இல்லை என மல்யூத்த போட்டியிலும் சாதித்து வரும் வினேஷ் போகத் பெண்களுக்கு மிக பெரிய உந்துசக்தியாகவே உள்ளார்.
Discussion about this post