விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் இஸ்ரோவின் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அதன் ஆயுள் இன்றுடன் முடிவடைய உள்ளது.
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தியது. நிலவில் தரையிறங்கும் போது 2 புள்ளி 1 கிலோ மீட்டர் தொலைவில் விகரம் லேண்டருடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து பெரும் முயற்சிக்கு பின் ஆர்பிட்டர் மூலம், விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டறியபட்டது. அதனை தொடர்பு கொள்ள இஸ்ரோ முயற்சி மேற்கொண்ட நிலையில் நாசாவின் உதவியும் நாடப்பட்டது.
நாசாவாலும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இயலாமல் போனது. விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் 14 நாட்கள் என கூறப்பட்டநிலையில் அதன் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால், இஸ்ரோவின் முயற்சி பலனளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Discussion about this post