இஸ்ரேலில், ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலில், ஏப்ரலில் நடந்த பொதுத் தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காதநிலையில், மீண்டும் பொதுத் தேர்தல் நடந்தது. இதில், 97 சதவீத ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 31 இடங்களிலும், புளூ அன்ட் ஒயிட் கூட்டணி 33 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆட்சி அமைப்பதற்கு, 61 இடங்கள் தேவைப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவரான, பென்னி கான்ட்சுடன் இணைந்து, கூட்டணி ஆட்சியை அமைக்க தயாராக இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இதையடுத்து, கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என கூறியுள்ள பென்னி கான்ட்ஸ், தங்கள் கட்சி தான், ஆட்சியை வழி நடத்தும் என்றும், இஸ்ரேலின் அடுத்த பிரதமராக தான் இருக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இஸ்ரேல் நாட்டு அரசியலில் திருப்பம் நிகழ்ந்துள்ளது.
Discussion about this post