ஓசூரில் தடை செய்யப்பட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்ததுடன், 374 கிலோ எடை கொண்ட குட்காவை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவரை கையும், களவுமாக பிடித்தனர்.
அவர்களிடமிருந்து 4 லட்ச ரூபாய் மதிப்பிலான 374 கிலோ எடை கொண்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவர்களிடமும் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்த பலராம், தீபா ராம் என்பதும், குட்கா பொருட்களை நாமேல் பேட்டை பகுதியிலுள்ள கோபால் என்பவரின் மளிகை கடையில் வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது. தலைமறைவான கோபாலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Discussion about this post