புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிக அபராதத் தொகை வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதி செய்யவும், மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தைக் கொண்டு வந்தது.
புதிய சட்டத்தால், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அதிகளவில் அபராதத் தொகை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிக அபராதத் தொகை வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வேலைநிறுத்தத்திற்கு 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் சுமார் 45 லட்சம் லாரிகள் ஓடாது என எதிர்பார்க்கப் படுகிறது. லாரிகள் வேலைநிறுத்ததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தலைநகர் டெல்லியில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து, ஓலா, உபர் வாடகை கார்களும், தனியார் பேருந்துகள் வேலைநிறுத்ததில் ஈடுபடுகின்றன. பள்ளி வாகனங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதால், மாணவர்கள் சிரமம் அடைவதை தவிர்க்க டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post