காரைக்குடியில் 10 ரூபாய்க்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு கொடுத்து அசத்தி வரும் உணவகம் ஏழை, எளிய மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கல்லலில் சேவை மனபான்மை கொண்ட அறக்கட்டளை ஒன்று 10 ரூபாய் உணவகத்தை துவங்கியுள்ளனர். 100 ரூபாய் மதிப்புள்ள சாப்பாட்டை 10 ரூபாய்க்கு கொடுத்து ஏழை மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றனர்.
அம்மா உணவகம் போல் செயல்பட்டு வரும் இந்த உணவகம் ஏழை எளிய மக்களின் திருப்திபடுத்தி உள்ளதாக, அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Discussion about this post