இரவு நேரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவரை தாக்கி, அவரிடம் கும்பல் ஒன்று வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் ஆரணி பகுதியில் அரங்கேறியுள்ளது.
ஆரணி சத்தியமூர்த்தி சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே நேற்று முன் தினம் இரவு 9.30 மணியள வில் முதியவர் ஒருவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று வாலிபர்களின் 2 பேர் வாகனத்தில் இருந்து இறங்கி முதியவரை முகத்திலும் முதுகிலும் குத்த தொடங்கினர். உடனே வலி தாங்க முடியாமல் அந்த முதியவர் அருகில் 2 சக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த 2 பேரிடம் தஞ்சம் புகுந்து கொள்கிறார். இருப்பினும் விடாமல் முதியவரை துரத்தி சட்டையை பிடித்து இழுத்து அவரை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர்.
இதில் பயந்துபோன அந்த முதியவரின் சட்டை பையில் இருந்து கொள்ளை அடிக்க தொடங்குகின்றனர். தன்னுடைய பொருட்களை பாதுகாக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த முதியவரை அடித்து அவரிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிய ஓடியது ஈவு இரக்கமற்ற அந்த கொள்ளை கும்பல்.
இதை சாலை செல்பவர்கள் நமக்கேன் வீண் வம்பு என்று கண்டும் காணாதது போல கடந்து செல்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி, தற்போது அது வைரலாக பரவி வருகிறது. இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் இது போன்ற வழிப்பறி கொள்ளை சம்பவம் நடந்துள்ளது ஆரணி பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post