காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு 5 கோடி மரக்கன்றுகள் வழங்க உள்ளாட்சித்துறை தயாராக இருப்பதாக, அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
காவிரி நதி பாதுகாப்பை வலியுறுத்தி ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், காவிரி கூக்குரல் இயக்கம் என்ற பெயரில் கடந்த 3ஆம் தேதி இருசக்கர வாகனப் பேரணியை தொடங்கினார். தலைக்காவிரியில் தொடங்கிய வாகன பேரணி 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர்கள் கடந்து சென்னையில் நிறைவடைந்தது.
பேரணி நிறைவையொட்டி கோவை கொடிசியாவில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நீர் மேலாண்மையில் இந்தியாவிலே தமிழகம் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டார்.
காவிரி கூக்குரல் இயக்கத்திற்காக 5 கோடி மரக்கன்றுகளை வழங்க உள்ளாட்சித்துறை தயாராக இருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறினார்.
Discussion about this post