உலக மக்கள் அனைவரும் அயர்லாந்து நாட்டின் உணவு வகைகளை பற்றி அறிந்துக்கொள்ளும் வகையில் அந்நாட்டு அரசு உலகின் மிக நீளமான உணவுத்திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளது.
இலையுதிர்காலத்தை கொண்டாடும் வகையில் ஏற்கனவே “Taste of West Cork” என்ற திருவிழா அந்நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழா நவம்பர் 30ம் தேதி முடிவடைகிறது. இதன் முடிவில் நடைபெறும் உணவுத்திருவிழாவில் 700க்கும் மேற்பட்ட உணவு மற்றும் மதுபான வகைகள் இடம் பெற உள்ளது.
இந்த திருவிழா ஐரிஷ் உணவுகளை பற்றி அறிவதற்கான நல்ல வாய்ப்பாக அந்நாட்டு அரசால் நம்பப்படுகிறது.
இந்த உணவுத்திருவிழா “Taste the Island” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இங்கு நீங்கள் சாப்பிட்டை ருசிப்பார்ப்பது மட்டுமல்லாமல் உணவுகளை சமைக்கவும் கற்றுக்கொள்ளலாம். அதனைத் தவிர்த்து அந்நாட்டில் உள்ள உயரிய உணவகங்களை பார்வையிடவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
Discussion about this post