இந்திய பங்கு சந்தைகள் வர்த்தக நேர முடிவில் கடும் சரிவுடன் நிறைவடைந்தன…
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை மற்றும் அமெரிக்க டாலரில் ஏற்பட்ட மாற்றம் ஆகிய காரணங்களால் இன்று நாள் முழுவதும் இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. வர்த்தக நேர தொடக்கத்தில் இந்திய பங்கு சந்தைகள் சரிவுடன் தொடங்கி ஒரு கட்டத்தில் 666புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. ஆக்சிஸ் வங்கி, HCL டெக், HDFC, ICICI வங்கி மற்றும் டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து, 36 ஆயிரத்து 481 புள்ளிகளாக வர்த்தகமானது. இதேபோல், நிப்டியின் துறை சார்ந்த அனைத்து குறியீட்டு எண்களும் ஒரு சதவீதம் சரிவுடனேயே வர்த்தகமானது. தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 185 புள்ளிகள் சரிந்து, 10 ஆயிரத்து 817 புள்ளியாக வர்த்தகமானது.
Discussion about this post