இன்றைய தலைமுறையினர் தங்களது அழகினை மேன்மேலும் கூட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர், அந்த வகையில் ஹெர் கலர் செய்வது தற்போது பிரபலம் அடைந்து வருகிறது.
தற்போது, இளைஞர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது ஹெர் கலர் ட்ரெண்டிங், பெண்கள் மட்டும் அல்லாமல் ஆண்களும் தற்போது அதிக அளவில் தங்களது தலை முடிகளுக்கு வகை வகையான கலர் ரசாயணங்கள் பூசி வருகின்றனர், ரசாயணங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை நினைத்து ஒரு போதும் இன்றைய இளைஞர்கள் அஞ்சுவது இல்லை.
ஹெர் கலர் எண்ணதான் தங்களது முடிகளில் உபயோகிக்கும்போது பார்க்க அழகாக காட்சியளித்தாலும், அதில் உபயோகிக்கப்படும் ரசாயணத்தின் பக்கவிளைவுகள் அதிகமாகவே இருக்கிறது. அதில் இருந்து மீள்வதற்காகவே இயற்கை முறை மருத்துவம் பயன்படுகிறது.
பக்கவிளைவுகள் எதுவும் இல்லாமல் , தலைமுடிக்கு குளிர்ச்சி அளிக்கும் விதத்தில் எளிமையான முறையில்
பீட்ருட் கொண்டு இயற்கை முறையில் ஹெர்-டை நாம் வீட்டில் இருந்தபடியே தயாரிக்கலாம்.
அரைத்த பீட்ரூட் விழுது மற்றும் கடைகளில் இயற்கையான முறையில் கிடைக்ககூடிய மருதாணி பவூடர், இரண்டையும் ஒன்றாக கலந்துகொள்ள வேண்டும் பின்னர் அதனை தங்களது தலைமுடியில் தேவைபட்ட இடத்தில் அப்ளே செய்தபின். 20நிமிடம் கழித்து பார்த்தால் இயற்கை முறையில் ஹெர் கலர் கிடைத்திற்கும். மேலும் இயற்கை முறையில் இந்த ஹெர் டை இருப்பதால் ரசாயணங்களால் விளையக்கூடிய ,முடி உதிர்தல்,ஒவ்வாமை போன்றவையிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
Discussion about this post