ஐரோப்பிய ஒன்றியத்தின் அபராதத்தை எதிர்த்துச் சட்டரீதியான போராட்டத்தை நடத்த ஆப்பிள் நிறுவனம் தயாராகி வருகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் வரி செலுத்தத் தவறும்போது ஐரோப்பிய ஒன்றியம் அவற்றின் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் முறையாக வரி செலுத்தாத ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆயிரத்து முந்நூறு கோடி யூரோ அபராதம் விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த உத்தரவைச் சட்டப்படி எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனம் தயாராகி வருகிறது. ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் லக்சம்பர்க்கில் இன்று முதல் இரண்டு நாள் நடைபெறும் நீதிமன்ற விசாரணைக்கு 6பேர் கொண்ட சட்ட வல்லுநர் குழுவை அனுப்பி வைத்துள்ளது.
Discussion about this post