கச்சா எண்ணெய் விலை உயர்வையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.
சவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால், கச்சா எண்ணெய் உற்பத்தியை அந்நாடு குறைத்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியாக சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்துள்ளது.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 ரூபாய் 99 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 69 ரூபாய் 31 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
Discussion about this post