பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான புதிய தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மொழிப்பாடங்களுக்கு ஒரே தாள் என்று அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனேவே வெளியிடப்பட்ட 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை மாற்றி, புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி மொழிப்பாடமும், மார்ச் 28ல் விருப்பப்பாடமும், மார்ச் 31ஆம் தேதி ஆங்கில தேர்வும் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும், ஏப்ரல் 7 ஆம் தேதி அறிவியலும், ஏப்ரல் 13ஆம் தேதி கணித தேர்வும் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 4ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post