நாம் அன்றாட உண்ணும் உணவோடு சிறிது பழங்கள் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்லது என நம் முன்னோர்கள் கூறியதற்கு ஒரு காரணம் உண்டு.இவை இதயநோய்கள், சிறுநீரக கற்கள் மற்றும் தொற்று நோய்களை குறைக்க உதவும்.அதிலும் முகத்திற்கு பொலிவூட்டும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் முகவும் பளிச்செனவும், இளமையாகவும் தோன்றும்.இதில் வைட்டமின் சி இருப்பதால் தோலில் உள்ள பாக்டீரியா மற்றும் நோய்கிருமிகளை கட்டுப்படுத்த உதவுகிறது.உங்களின் சருமத்தை பளிச்சென மாற்றும் சிட்ரஸ் பழங்கள் இதோ…
1.ஆரஞ்சு
நல்ல ஆரோக்கியமான பொலிவான முகத்திற்கு ஆரஞ்சு பழத்தினை உண்ண வேண்டும்.இது முகத்தில் உள்ள dead cells-ஐ நீக்கும்.அதே போல் ஆரஞ்சு பழத்தின் தோலினை நன்கு உலர வைத்து அரைத்து முகத்திற்கு facemask-ஆக பயன்படுத்தலாம்.
2.எலுமிச்சை
எலுமிச்சை சாறுடன் தேன் சேர்த்து தடவினால் முகத்திற்கு நல்ல பொலிவினை தரும்.இது கருவளைய செல்களை நீக்க உதவும்.
3.சாத்துக்குடி
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போலவே இந்த பழத்திலும் ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்துள்ளதால் சாத்துக்குடியை அதிகம் எடுத்துக்கொண்டால் முகத்திற்கு தெளிவு கிடைக்கும்.
4.கினோவ் பழம்
இந்த பழத்தினை சாப்பிட்டாலே உடலுக்கு அத்தனை நன்மைகளை தரும்.
5.லிச்சி பழம்
லிச்சி பழத்தில் நார்சத்து இருப்பதால் செரிமானத்தை சீராக்குகிறது.அதே போல் வைட்டமின் சி இருப்பதால் சருமத்தின் அழகை கூட்டும்.
Discussion about this post