பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டப்படி காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், எம்.பி.யுமான பரூக் அப்துல்லாவைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கிய அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டதில் இருந்து, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஸ்ரீநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான பரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நள்ளிரவில் அவரைப் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகக் காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. ஸ்ரீநகரில் உள்ள இல்லத்திலேயே பரூக் அப்துல்லா தொடர்ந்து சிறை வைத்துள்ள நிலையில், அந்த இல்லம் கிளைச் சிறையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் ஒருவரை விசாரணையின்றி 2 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post