தமிழகத்தின் பேரிடர்க்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மீட்பு நடவடிக்கை, மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உலக அளவில் பாராட்டுக் கிடைத்துள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மாநிலப் பேரிடர் மேலாண்மை முகமையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது வடகிழக்குப் பருவமழைக் காலத்தை முன்னிட்டு மழைநீரைச் சேமிக்கும் வகையில் ஏரி குளங்கள் சிறப்பாகத் தூர்வாரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். பேரிடர்க்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மீட்பு நடவடிக்கை, மறுசீரமைப்பு நடவடிக்கை ஆகியவற்றுக்கான டிஎன் ஸ்மார்ட் என்கிற தமிழக அரசின் செயலிக்கு உலக அளவில் பாராட்டுக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
Discussion about this post