ஓணம் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை பேரழகுடன் கொட்டி வரும், திற்பரப்பு அருவியில், கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால், படகு சவாரி, சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால், கன்னியாகுமரி பகுதி வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post