ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிபடுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு உலகம் முழுவதும் அறியப்பட்ட பெயர், ஒசாமா பின்லேடன். அல்கொய்தா தீவிரவாத அமைப்பை உருவாக்கி பின்லேடனை, பாகிஸ்தானில், கடந்த 2011-ம் ஆண்டு, அமெரிக்கா படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அந்தத் தாக்குதலில், ஒசாமாவின் மகனான காலித்தும் கொல்லப்பட்டார். ஆனால், அவரது மற்றுமொரு மகன் ஹம்ஸா ஒசாமா தாக்குதலிலிருந்து உயிர் தப்பினார்.
இதனையடுத்து, ஹம்ஸா பின்லேடனைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. ஒசாமாவின் இறப்புக்குப்பின், அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைமையாக ஒசாமாவின் மகன் ஹம்சா செயல்பட்டுவருவதாகவும் அவரை உளவுத்துறை அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்துவருவதாகவும், அமெரிக்காவைப் பழி வாங்கத் திட்டம் தீட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஹம்சாபின்லேடன் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிபடுத்தியுள்ளார். ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்ட இடம், தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Discussion about this post