திரைக்கு வந்த புதிய திரைப்படங்களை விமர்சனம் செய்யும் பிரபல யூடியூப் திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலம் புதிய படத்தினை இயக்க உள்ளார்.
ப்ளூசட்டை மாறன், யாருடைய படமானாலும் தயவுதாட்சண்யமின்றி கிண்டலாக விமர்சனம் செய்து இவருடைய தனி தொனியில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவரது வீடியோக்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவரது விமர்சனத்தால் பாதிக்கபட்டவர்கள், இவர் படமெடுத்தால் தான் படமெடுப்பவனின் கஷ்டம் தெரியும் என்று பலரும் சொல்லி வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக சொந்தமாக படத்தை இயக்க முயன்று வந்தார். இப்போது அவர் படத்தை இயக்கவும் ரெடியாகியுள்ளார்.
அதன் முதல் கட்டமாகவே, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலமாக இயக்க உள்ளதாக முடிவு எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று இப்படத்தின் பூஜை, தயாரிப்பாளரின் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ஒரு புறம் அவர் எப்படி படம் எடுக்க போகிறார்?எனவும் இன்னொரு புறம் ப்ளூசட்டை மாறனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
==========
Discussion about this post