வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் என்பவருக்கு இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
பெல்ஜியம் நாட்டின் குடியுரிமை பெற்றவரான நேஹல் வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச் செல்ல நீரவ் மோடிக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்த அமலாக்கத்துறை நேஹலுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என இன்டர்போல் அமைப்பிடம் கோரிக்கை வைத்திருந்தது. மேலும் நேஹல், நீரவ் மோடி தொடர்பான வழக்கின் ஆதாரங்களை அழித்துவிடும் வாய்ப்பு இருப்பதாக அமலாக்கத்துறை இன்டர்போல் அமைப்பிடம் தெரிவித்திருந்தது. இதனை ஏற்ற இன்டர்போல் அமைப்பு நேஹலுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
Discussion about this post