ஏர்டெல் நிறுவனம் தற்போது airtel xtreme fiber என்ற புதிய பிராட்பேண்ட் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது வெறும் ரூ.3,999 விலையில் 1GB /sec வேகத்தில் இன்டர்நெட் சேவை கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ fiber சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் அதிரடியாக தற்போது airtel xtreme fiber என்ற புதிய பிராட்பேண்ட் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் High-Speed Broadband திட்டம் அன்லிமிடெட் இன்டர்நெட் வசதியுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் சேவையுடன், மூன்று மாத இலவச Netflix, ஒரு வருட Amazon Prime சந்தா மற்றும் ZEE 5 மற்றும் airtel xtreme அமைப்புக்கான சந்தா என அனைத்து புதிய சேவைகளையும் இத்திட்டத்தின் கீழ் வாரி வழங்கியுள்ளது.
இந்த சேவை தற்போது முதற்கட்டமாக டெல்லி, ஃபரிதாபாத், ஹைதராபாத், மும்பை, புனே, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, இந்தோர், ஜெய்ப்பூர் மற்றும் அஹமதாபாத் பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் சில மாதங்களில் அனைத்து நகரங்களிலும் இந்த airtel xtreme fiber பிராட்பேண்ட் சேவை திட்டம் கொண்டு வரப்படும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.
Discussion about this post