தருமபுரியில் காவிரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பெண்ணின் உடல் 2 நாட்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்த புதுச்சேரிக்காரரான மனோ, தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கண்டுகளிக்க வந்துள்ளார். இவர்கள் புதனன்று ஒகேனக்கல்லில் குடும்பத்துடன் காவிரி ஆற்றில் பரிசலில் சென்றுள்ளனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான முசல்மடுவு எனும் பகுதியில் பரிசல் சுழலில் சிக்கிக் கவிழ்ந்தது. இதில் மூவர் காப்பாற்றப்பட்ட நிலையில் மனோவின் மனைவி அஞ்சலாட்சி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். தடைக் காலத்தில் பரிசல் இயக்கியவரைக் கைது செய்த காவல்துறையினர் அஞ்சலாட்சியைத் தேடி வந்தனர். இந்நிலையில் ஒகேனக்கல்லில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் செங்கம்பாடி காவிரிக் கரையோரம் அஞ்சலாட்சி உடல் கண்டெடுக்கப்பட்டது.
Discussion about this post