அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களது திறமையை நிருபித்து வெற்றிபெற்றுவரும் வகையில் , உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் மேரி கோம்.. யார் இந்த மேரி கோம் இவரை பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…….
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்தான் இந்த மேரிகோம்,இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.. சிறுவயதிலேயே குத்து சண்டை மீது ஆர்வம் கொண்டவர்.. ஆர்வம், உழைப்பு, விடாமுயற்சி, ஓயாத போராட்டம் ஆகியவை சிறுவயது முதலே இவருடன் தொற்றிக்கொண்டவை.
2004 ஆம் ஆண்டு நார்வேயில் நடந்த பெண் குத்துச்சண்டை உலகக் கோப்பை போட்டியில் முதலாம் இடம் பெற்றார்..
2006 மற்றும் 2010ஆம் ஆண்டு நடந்த உலகச் குத்துச் சண்டைப் போட்டிகளில் மகுடம் சூடினார்..
அர்ஜூனா விருது , பத்மஸ்ரீ விருது , ராஜுவ்காந்தி கேல் ரத்னா விருது ஆகியவை இவரது வெற்றி மகுடத்தில், வைரக் கற்களாக அலங்கரிக்கின்றன..
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையும் இவரைச் சாரும்…
இவரின் கடின உழைப்பை பார்த்து, இந்தியாவின் மிகப் பெரிய விருதான பத்ம விபூஷன் விருதுக்கு பரிந்துரைசெய்யப்பட்டுள்ளார் என்பது கூறிப்பிடதக்கது.
Discussion about this post