குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள ஆசை வருகிறதோ, அப்போது தான் எனது திருமணம் நடைபெறும் என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார் .
கடந்த 2010 ஆம் ஆண்டு ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான டாப்ஸிக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனிடையே இந்த ஆண்டு வெளியான” game over” என்ற திரைப்படத்தில் மாறுப்பட்ட கதைக் களத்தில் டாப்ஸி தனது தத்துரூப நடிப்பை வெளிப்படுத்தி பல பாராட்டுகளை பெற்றார்..
இந்நிலையில் டாப்ஸி தனது வருங்கால கணவரைப் பற்றி சில பேட்டிகளில் கூறுகையில், அவர் நடிகர் இல்லை என்றும் கிரிக்கெட் பிரபலம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை வருகிறதோ… அப்போது தான் திருமணம் செய்துகொள்வேன் என உண்மையை போட்டு உடைத்துள்ளார். தற்போது ஹிந்தியில் பல படங்களில் பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post