பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க காஞ்சிபுரம் சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுகவினரும், பொதுமக்களும் திரண்டு அவரை வரவேற்றனர்.
பின்னர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லதிற்கு சென்ற அவர், அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, அதிமுக கொடியை ஏற்றி வைத்த அவர், தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் கல்வெட்டினை திறந்து வைத்தார்.
காந்தி சாலையில் உள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு, பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
Discussion about this post