வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியை எட்டிய நிலையில் விவசாயிகளின் நலன் கருதி தொட்டிபாலம் வழியாக தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அதன்படி, 15 தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இந்த நீரால் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்துள்ளன.
இந்த நிலையில் திருமங்கலம் பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் உசிலம்பட்டி, குப்பணம்பட்டி, செல்லம்பட்டி, வாலாந்தூர், கருமாத்தூர் போன்ற பகுதிகளில் விவசாய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
மூன்று வருடங்களாக போதிய மழை இல்லாததால், விவசாயிகள் வேதனையில் கிடைந்தனர். தற்போது போதிய அளவு நீர் கிடைத்து, விவசாய பணிகள் தொடங்கி இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Discussion about this post