பிரான்சில் நாட்டில் கடும் வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக 1435 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஐரோப்பிய நாடுகளில் கோடை காலமான கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கடுமையான அனல் காற்று வீசியது. குறிப்பாக பிராண்ஸ் நாட்டில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியசிற்கு அதிகமாகச் சென்றது. இதனால் பலமுறை சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென்றும் அரசும் பலமுறை எச்சரித்தது. இந்நிலையில் பிரான்சில் கோடை வெயிலுக்கு ஆயிரத்து 435 பேர் உயரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் 75 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பிரான்சில் மட்டுமே கோடை வெயிலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post