எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், தொடர்ந்து இரண்டாவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
ரஜோரி மாவட்டத்தில் உள்ள, சுந்தர்பனி, நவ்ஷேரா பகுதிகளில் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தரப்பு தாக்குதலால், எல்லை பகுதியில் வசிக்கும் மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவரின் வீடு சேதம் அடைந்துள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட்டி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் உடனடியாக பதிலடி கொடுத்தது. இந்த மோதல் பல மணி நேரம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post